பாக்யா மாமனார் இத்தனை படங்களில் நடித்தவரா? குடும்ப புகைப்படங்கள் வைரல்

தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையில் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

பாக்யா மாமனார் இத்தனை படங்களில் நடித்தவரா? குடும்ப புகைப்படங்கள் வைரல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் எஸ்.டி.பி. ரோசாரி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்கை மற்றும் அம்மாவுடன்

விஜய் டிவியின் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பாக்யா தனி ஆளாக குடும்பத்திற்காக போராடி வரும் நிலையில், அவருக்கு பக்கபலமாக அவரது மாமனார் ராமமூர்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதேபோல் இணையத்தில் அவர் தொடர்பான தகவல்களை ரசிகர்கள் தேடி வரும் நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.டி.பி. ரோசாரி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 1993-ம் ஆண்டில் இருந்து பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன்

குறிப்பாக மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ராஜா மகன், தோழர் பாண்டியன், அமைதிப்படை, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள எஸ்.டி.பி. ரோசாரி தனுஷூடன் பொல்லாதவன், சிம்புவுடன் தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையில் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் பாக்கியலட்சுமி சீரியல் தான். இதில் அவர் செய்யும் ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவாக காரணமாகவும் இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் மற்றொரு ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் முல்லையின் அப்பாவாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது சென்னையில் வசித்து வந்தாலும், அவரது அம்மா அக்கா உள்ளிட்ட உறவினர்கள் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர். ஓய்வு நேரங்களில் தனது உறவினர்களை பார்க்க சொந்த ஊருக்கு செல்லும் எஸ்.டி.பி. ரோசாரி அங்கு தான் ஒரு கிராமத்து ஆள் என்பதை நிரூபிக்கும் வகையில் வித்தியாசமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor stp rosary family photos viral on scoail media

Exit mobile version