scorecardresearch

தொடர் தோல்வி படங்கள்… வாழ்க்கை கொடுத்த சன் டிவி சீரியல்… வானத்தை போல சின்னராசுவின் வாழ்க்கை கதை

Tamil Serial News : தமன்குமார், தற்போது சீரியலில் நடித்தாலும், திரைப்படங்கிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

Tamil Serial Actor Thaman Kumar Life : தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்தரை சீரியல்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவான ரசிகர்கள் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளை கவரும் வகையிலான கதை அமசத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்று கூறலாம். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று வானத்தைபோல.

சன்டியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டு்ளள இந்த சீரியில், சமீபத்தில் தனது 250-வது எபிசோட்டை நிறைவு செய்தது. இதில் முதன்மை கதாப்பாத்திரம் சின்னராசுவாக நடிகர் தமன்குமார் நடித்து வரும் நிலையில், அவருக்கு தங்கை துளசியாக ஸ்வேதா கெல்கே, மற்றும் காதலிய சந்தியாவாக தேப்ஜனி மோடக் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் சின்னராசுவாக நடித்து வரும் நடிகர் தமன்குமார் தமிழ் சினிமாவில் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தொடக்கத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பலரும் சீரியலுக்கு வருவார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் முதலில் சீரியலில் எண்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுக்கின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக வெள்ளித்திரையில் வெற்றி கிடைக்காத நடிகர் தமன்குமார் சீரியல் மூலம் பிரபலமாகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த அவர், தொடக்கத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருக்கும்போது கடந்த 2011-ம் ஆண்டு லண்டன் மாப்பிள்ளை என்ற படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். ஆனால் அந்த படம் தொடங்காமலே போய் விட்டது. அதன்பிறகு படித்துறை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஆனால அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் துரதிஷ்டவசமாக அந்த படம் வெளியாகமால் போனது. அதன்பிறகு  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என என பல படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு கைகொடுக்காத நிலையில், வானத்தை போல சீரியல் வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமன் குமாருக்கு பெரிய பெயர் பெற்று தந்துள்ளது.

பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காத நிலையில் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயங்கிய இவர் பிறகு சன் டிவி என்றவுடன் துணிந்து நடிக்க வந்தார். இப்போது இவர் மக்களின் பாசக்கார சின்ராசு அண்ணனாகவே மாறிவிட்டார். இதன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள தமன்குமார், சீரியலில் நடித்தாலும், திரைப்படங்கிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில், தற்போது கண்மணி பாப்பா, யாழி ஆகிய ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மேம் தமன்குமார் சில டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor thaman kumar life story update in tamil