Pandian Stores Jeeva Dubmash : பாண்டியன் ஸ்டேர்ஸ் சீரியல் ஒருபக்கம் கலைகட்டினாலும், அந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்கள் ஒருபக்கம் நெட்சன்களை உற்சாகப்படுத்த மறப்பத்தில்லை. அநத வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா செய்த ஒரு டப்ஸ்மாஷ் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குறித்து ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல். அதுமட்டல்லாமல், இளைஞர்கள் பலரையும் சீரியல் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு உணடு.
சுஜிதா தனுஷ், ஸ்டான்லி, ஹேமா ராஜ்குகுமார், குமரன் தங்கராஜன், வெங்கட், சரவண விக்ரம், காவியா அறிவுமணி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், சகோதர பாசம், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சீரியல் நட்சத்திரங்கள், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது வழக்கம். அதுபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அனைத்து நட்சத்திரங்களுமே சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகினறனர். அப்படி இவர்கள் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் வெளியிட்டுள்ள டப்ஸ்மாஷ் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. வின்னர் படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிய ரீச். இந்த காமெடியை பலரும் டப்ஸ்மாஷ் செய்து பிரபலமாகியுள்ள நிலையில், தற்போது படத்தில் இடம்பெறும் வசனம் ஒன்றை ஜீவா டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ஜீவா வடிவேலுவுக்கே டஃப் கொடுப்பார் போல என்று புகழ்ந்து வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “