RojaSerial Actor Venkat Leaving In This Serial : சின்னத்திரை நடிகர்களில் பலமான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளவர் வெங்கட் ரங்கநாதன். தொகுப்பாளராக அறிமுகமாகி விஜய்டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சீரியல் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல சீரியல்களில் நடித்தார். ஆனால் இவரை புகழின் உச்சிக்கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
Advertisment
கூட்டுக்குடும்பம் மற்றும் சகோதர பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் முதல் தம்பி ஜீவாவாக நடித்து வருபவர் தான் வெங்கட் ரங்கநாதன். இந்த சீரியலில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டுமல்லாது வெங்கட் சன்டிவியின் ரோஜா சீரியலிலும் அஸ்வின் என்ற கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக இவரது கேரக்டர் இல்லாத குறித்து எவ்வத தகவலும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் முதல் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த பூஜா கேரக்டர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது. இதனால் மீண்டும் அஸ்வின் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், அந்த கேரக்டரில் நடித்து வந்த வெங்கட் ரங்கநாதன் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல வெங்கட் ஒரு கெட்ட செய்தி உங்கள் அஸ்வின் நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறார். உங்களை ஏமாற்றியதற்க்கு மன்னித்துவிடுங்கள். ஆனால், நீங்கள் என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், அஸ்வின் இல்லை என்றாலும் ஜீவா கேரக்டரை விட்டுவிடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil