விஜய் அரசியல் என்டரி... பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் உருக்கமான பதிவு : வைரல் வீடியோ

தற்போது விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் நாயகனகாக நடித்து வரும் வெங்கட், நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் நாயகனகாக நடித்து வரும் வெங்கட், நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay and Venkat

சீரியல் நடிகர் வெங்கட் - தளபதி விஜய்

பாண்யடியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை வெங்கட் நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள சோகமாக வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் பாண்யன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெங்கட். அதே போல் சன்டிவியின் ரோஜா சீரயிலில் நாயகன் அர்ஜூனின் தம்பியாக நடித்து வந்த இவர், அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகி பாண்டியன் ஸ்டோர்ஸில் தொடர்ந்து நடித்து வந்தார்.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ்குமார் ஆகியோர் தவிர மற்ற யாரும் 2-ம் பாகத்தில் நடிக்காத நிலையில், வெங்கட் தற்போது விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் நாயகனகாக நடித்து வருகிறார். 

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வெங்கட் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சோகமான வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு கனவு இருக்கும், அதற்கான முயற்சிகளை செய்து வருவோம், எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது.

Advertisment
Advertisements

அப்படி ஒரு கனவு தான் விஜய் அண்ணாவுடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான். கடவுளிடம் தினமும் வேண்டுவேன், ஒரு காட்சயில் கூட நிற்பது போலாவது நடித்துவிட வேண்டும் என வேண்டுவேன். நேற்றும் வேண்டினேன், அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன். ஆனால் அவர் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன். இதுதான் என் கடைசி படம் என்று அறிவித்துவிட்டார்.

ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது. விஜய் அண்ணா கூட எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்பது என் மனதில் பதிந்துவிட்டது. அதற்கான முயற்சியும் எடுத்தேன். ஆனால் நடக்கவில்லை. இதற்கு நேரமும் காலமும் தான் காரணம் என்று நான் நம்புகிறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. இதையும் சிலர் கிண்டலும் கேலியும் செய்யலாம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும், வெங்கட்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: