/indian-express-tamil/media/media_files/myh3UA33i6suBlYHhkWk.jpg)
சிறடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. சன் டிவி சீரியல்களுக்கு இணையாக வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடிக்க, நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
3 ஆண் பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தில் 2-வது மகனை அம்மாவுக்கு பிடிக்காத நிலையில், மூத்தமகன், வேலை இல்லாமல் இருக்கிறான். கடைசி மகன் ஹோட்டலில் செஃப்பாக வேலை செய்கிறான். இவர்கள் மூவருக்குமே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், அவ்வப்போது வீட்டில் வரும் குழப்பங்கள், சண்டைகள் என சீரியல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சிறகடிக்க ஆசை பெரும் எதிர்பார்ப்போடு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாயகன் முத்து, சின்ன வயதில், தான் இங்கு வந்த்து பற்றியும், ஜெயிலுக்கு போனது பற்றியும் சொல்ல, அவனது அப்பா அண்ணாமலை, மகிழ்ச்சியாக இருக்கும்போது இப்ப எதுக்கு அந்த பேச்சு என்று ஆப் செய்துவிடுவார். ஆனாலும் முத்து மனோஜை பார்த்து முறைத்துக் கொண்டே இருப்பார். இதை கண்டுகொளாத்து போல் விஜயா இருப்பார்.
இதனால் முத்து எதனால் ஜெயிலுக்கு போனார் என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில், சமீபத்தில் பேட்டியில் பேசிய வெற்றி வசந்த், இது பற்றி கூறியுள்ளார். இந்த சீரியல் ஆடிஷன் நடப்பதாக ஒரு நண்பர் சொன்னார். அதன்படி நான் அங்கு சென்றேன். என்னை விட, அழகா நிறையபேர் இருந்தாங்க. அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன். நல்லவேளையாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது என்னிட்டம் கதை சொல்லவில்லை.
2 நாட்கள் ஷூட்டிங் போனது, நாம்தான் கதாநாயகன் என்று சொல்கிறார்கள். ஆனால் குடும்பம் எப்படி என்று தெரியவில்லையே என்று யோசித்து இயக்குனர் குமரனிடம் கேட்டேன். இவர் இந்த சீரியல் நாயகன் நீதான். ஒரு கார் டிரைவர். சின்ன வயதில் ஒரு விபத்தை ஏற்படுத்தியதால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்றிருப்பாய் அதனால் உன் அ்மாவுக்கு உன் மேல் பாசம் இருக்காது. ஆனால் அப்படி பாசமாக இருப்பார் என்று சொன்னதாக வெற்றி வசந்த் கூறியுள்ளார். முத்து மனோஜை முறைத்து பார்த்ததில் இருந்து மனோஜ் செய்த தவறுக்காகத்தான் முத்து பழி ஏற்றுக்கொண்டு சிறை சென்றுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.