சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர், விமல் குமார் தற்போது ஜீ தமிழில் முக்கிய சீரியலில், வில்லியின் மாப்பிள்ளையாக அறிமுகமாகியுள்ளார். இது தொடர்பான ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையின் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்த எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. பெண்களின் முன்னேற்றம் பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியிலல் கரிகாலன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் விமல் குமார். சின்னத்திரையில் என்ட்ரி ஆவதற்கு முன்பு பல வேலைகளை செய்து வந்த இவர், இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அதில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் தற்போது விமல்குமார் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார். தீபாவின் திருமணத்தை நிறுத்த ரம்யா சதி செய்யும் நிலையில், அவரை அடக்குவதற்காக, ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அந்த மாப்பிள்ளை தான் விமல் குமார். ரம்யா இவருக்கு போன் செய்து மிரட்டி என்னை பிடிக்கவில்லை என்று சொல் என கூறிவிடுகிறார்.
மறுநாள் வீட்டுக்கு வரும் விமல், ரம்யாவின் அழகை பார்த்து பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட, ரம்யா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. எதிர்நீச்சல் சீரியலில் காமெடியனா வில்லனா என்று குழப்பத்தை ஏற்படுத்திய கரிகாலன் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த விமல் குமார், தற்போது கார்த்திகை தீபம் சீரியலிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபம் மட்டுமல்லாமல், சன்டிவியின் சொக்கத்தங்கம் என்ற சீரியலிலும் நடித்து வரும் விமல் குமார், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். திருநெல்வேலி ஆல் இந்தியா ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றியுள்ளார். இவர் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரது வீட்டில் விரும்பிய போது, கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தினால், கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தியுள்ளார் விமல் குமார்.
ஒரு கட்டத்தில் தான் ரஞ்சி மற்றும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வயதை கடந்துவிட்டதை உணர்ந்து கல்லூரி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடலாம் என்று நினைத்து கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.