Serial Actor Vinoth Babu Happy News : வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை விட சின்னத்திரை நட்சத்திரங்களக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் சின்னத்திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப பதிவுகளை வெளியிட்டு பிரபலமாகி வருகின்றனர். இவர்கள் வெளியிடும் சின்ன பதிவுகள் கூட பெரும் வைரலாக முடியும். அதேபோல் தங்களது வீட்டு விஷேஷ நிகழ்ச்சிகள் குறித்து சீரியல் நட்சத்திரங்கள் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிவதும் நடந்து வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நட்நத்திரம் ஒருவர் வெளியிட்டுள்ள விஷேஷ பதிவு தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து பிரபலமானவர் வினோத் பாபு. ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு பதிலாக ''தென்றல் வந்து என்னை தொடும்'' என்ற சீரியலை புதிதாக ஒளிபரப்ப விஜய்டிவி தயாராகி வருகிறது.
இந்த சீரியலிலும் நாயகனாக நடிகர் வினோத் பாபு நடித்து வரும் நிலையில், தற்போது அவர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும பிரபலங்கள் வினோத் பாபு மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும் வினோத் பாபுவின் மனைவி சிந்து என்கிற ஹேமலதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது குறித்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது பதிவில், கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை அறிவிப்பதில் நானும் வினோத்தும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இந்த இரகசியத்தை இவ்வளவு காலமாக வைத்திருந்தோம், இப்போது எங்கள் குடும்பம் வளர்கிறது என்று உங்களுக்குச் சொல்ல நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்கு கடவுளுக்கு நன்றி. கணவர், எப்போதும் எனக்கு பக்கபலமாக இருப்பதற்காகவும், எல்லாவற்றிலும் எனக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், நான் என் வாழ்க்கையில் இன்னும் அதிகமாக விரும்பினேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் உன்னை நேசிக்கிறேன், எங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வினோத் பாபு நாயகனாக நடித்து வரும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலின் ப்ரமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்டது. பெண்களில் தாலி செண்டிமெண்டை கேலி செய்யும் விதமாக வெளியான இந்த ப்ரமோ பெண்களுக்கு எதிராகவும், பிற்போக்கு தனமாகவும் இருக்கிறது என கடும் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil