Advertisment

திருமணத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்தேன் : சீரியல் நடிகர் விராட் மனைவி ஓபன் டாக்

18 வயதில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயான நவீனா சிவாஜி, முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில், விவாரத்து பெற்றிருந்தார்.

author-image
WebDesk
New Update
Virat Naveena

விராட் - நவீனா சிவாஜி

அன்பே வா சீரியல் மூலம் பிரபலமான நடிகர் விராட் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது திருமணத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சன் டிவியின் அன்பே வா சீரியல் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட நடிகர் விராட், தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக உருவெடுத்தார். சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விராட், மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா சிவாஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

18 வயதில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயான நவீனா சிவாஜி, முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில், விவாரத்து பெற்றிருந்தார். அதன்பிறகு விராட்டுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இந்த நட்பு காதலாக மாறி சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்காக நவீனா சிவாஜி 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் யாரையும் ஈஸியாக நம்பிவிட மாட்டேன். விராட் எங்கள் காதல் விவகாரத்தை அவரது அம்மாவிடம் சொல்லும் வரை அவர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்க அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கொரோனா காலக்கட்டத்தில் அவர் தவறிவிட்டார். அதனால் அதிகமான ஸ்ட்ரஸ் அனதால் ஸ்டீராய்டு எடுத்துக்கிட்டேன். அது ஒத்துவராததால் எனது உடல் எடை அதிகரித்தது.

நீ இப்படி இருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது. எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம் என்று விராட் சொன்னார். ஆனாலும் எனக்கு செல்ப் காண்பிடன்ட் வேண்டும் என்பதற்கனாக திருமணத்திற்கு முன் உடல் எடையை குறைக்கும் மயற்சியில் இறங்கினேன். மணமேடையில் இருவரும் ஒரே மாதிரி இருந்தால் பர்பெக்டாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்தேன். அந்த வகையில் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbe Vaa Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment