scorecardresearch

ஷாக்… கல்யாண போட்டோஸை டெலிட் செய்த விஜய் டி.வி சீரியல் ஜோடி: அதற்குள் என்ன பிரச்னை?

சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிய

Samyuktha Vishnukanth
சம்யுக்தா – விஷ்ணுகாந்த்

விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து சீரியல் நடிகை சம்யுக்தா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் விஷ்ணுகாந்தை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்தது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இது குறித்து விஷ்ணுகாந்திடம் கேட்க எல்லாம் விரைவில் தெரியவரும் என்று அவர் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்கள் திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதும் வழக்கமான இந்த காலக்கட்டத்தில் திருமணமான ஒரே மாதத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பிரிந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor vishnukantha and his wife samyuktha delete marriage photos

Best of Express