/indian-express-tamil/media/media_files/I19hHHnKOCVsJoPwdZW4.jpg)
வி.ஜே.அக்னி
சன்டிவியின் மலர் சீரியலில் நடித்து வந்த நடிகர் வி.ஜே அக்னி தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் காரணம் கேட்டு வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் வி.ஜே.அக்னி. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் திடீரென விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த வி.ஜே.அக்னி சில மாதங்களில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
மற்ற சேனல்களில் ஒரு சீரியலை முடித்த நட்சத்திரங்கள் அடுத்து சன்டிவி சீரியலுக்கு வருவது தான் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில், சன்டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மலர் சீரியலில் வி.ஜே.அக்னி லீடு ரோலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி சர்மா நடித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 250 எபிசோடுகளை கடந்துள்ளது.
இதனிடையே இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் வி.ஜே.அக்னி திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காயம் சரியாக நீண்ட காலம் ஆகும் என்பதால், இந்த சீரியல் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாக வேண்டும் என்பதால் நான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார். எனது கேரக்டரில் நடிக்க வரும் நடிகருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வி.ஜே.அக்னியிடம் நலம் விசாரித்து வரும் நிலையில், பகல் நேரத்தில் ஒளிபரப்பாவதால், மலர் சீரியலில் அவர் நடிப்பது பிரபலமாக ஒரு வாய்ப்பாக இருக்காது அதனால் அவர் விலகியதே நல்லது என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.