லாரி டிரைவரின் மகன்… செம்பருத்தி ஆதியின் அருமை தம்பி … விஜே கதிர் நடிகராக ஜெயித்த கதை

Tamil Serial Rating : சீரியலில் நடிக்கும்போதே வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பு பறிபோனது

Tamil Serial Actor VJ Kathir Lifestyle Update : வெள்ளதித்தரையை விட சின்னத்திரை தற்போது படு ஜோராக வரவேற்பை பெற்று வருகிறர். அதிலும் சீரியல் மட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகிறினர். சீரியல் நடிகர் நடிகைகளின் சமூகவலைதள பக்கங்களை ஆராய்நது பார்த்தால் இந்த உண்மை தெரியவரும். அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களின் ஃபாலோவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சின்னத்திரையில் அனைத்து சீரியல்களும், குடும்பத்திற்குள் நடக்கும் போட்டி பொறாமை, துரோகம், உள்ளி்ட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. இதில் ஒரு சில சீரியல்கள் விதிவிலக்காக அமைந்து வருகிறது. அந்த வகையில் மற்ற சீரியல்களில் இருந்து ஓரளவு வித்தியாசமான திரைக்கதை பெற்றுள்ள சீரியல் செம்பருத்தி. ஷாபனா விஜே அக்னி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல், ஜீ தமிழின் ப்ரைம டைமில் ஒளிரப்பாகி வருகிறது.

மேலும் நடிகை பிரியாராமன் இந்த சீரியலின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் பார்வதி ஆதி இருவருக்கும் இடையேயான காதலை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான முத்த மந்தாரம் சீரியலின் தழுவலாக உள்ள செம்பருத்தி சீரியல் தொடங்கிய 2017-ம் ஆண்டு முதல் இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தொடரில் நாயகன் ஆதியின் தம்பியாக நடித்து வருபவர் கதிர். முதல் சீரியலில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள கதிர் தொடக்கத்தில் விஜேவாக இருந்து பின்னர் தொகுப்பாளாரான மாறியுள்ளார். அதன்பிறன்ன செம்பருத்தி சீரியல் வாய்ப்பு கிடைக்கவே தற்போது நடிகரான தன்தைன நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், கதிர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு்ளளார்.

தன்னுடைய அப்பா லாரி டிரைவர், அம்மா கட்டிட வேலை செய்பவர் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த சூழ்நிலையில் படித்து பட்டம் வாங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊரில் திருவிழாக்களில் நடனமாடுவேன். அதே மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒரு தொகுப்பாளராக மாறினேன். இதை வைத்து ஒரு லோக்கல் சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்தபடியே பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய எனக்கு தற்போது சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

செம்பருத்தி சீரியல் என்னை ஒரு நடிகனா நிறுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் கிடைத்த புகழ் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. சீரியலில்நடிக்கும்போதே ஜில் ஜங் ஜக் என்ற ஷோவில் தொகுப்பாளராக இருந்தேன். ஒன்றரை வருடம் சென்ற இந்த ஷோ முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அடுத்து மாஸ்டர்தி பிளாஸ்டர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். ஆனால் தொடர்ச்சியாக சீரியல் ஷூட்டிங் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் என்னால் தொடர முடியவில்லை.

சீரியலில் நடிக்கும்போதே வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பு பறிபோனது. ஆனால் நல்ல கதையம்சம் அமைந்தால் நிச்சயம் வெள்ளித்திரையில் நடிப்பேன். என் குடும்த்தினர் இல்லை என்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. என் குடும்பத்தான் என் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார். வறுமையில் இருந்து வந்து திரையில் வென்ற விஜே கதிருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actor vj kathir lifestyle update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com