Advertisment

சீரியல் நடிகர் மனைவி மரணம்... துணிவு படத்தில் பிக்பாஸ் பிரபலம்... டாப் 5 சீரியல் செய்திகள்

சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வேலை செய்யும் மருத்துவமனையில் ஓனர் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
சீரியல் நடிகர் மனைவி மரணம்... துணிவு படத்தில் பிக்பாஸ் பிரபலம்... டாப் 5 சீரியல் செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்

Advertisment

சின்னத்திரையில் சீரியல் நாயகனாக அறியப்படுபவர் பரத் கல்யாண். பல வருடங்களாக சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வேலை செய்யும் மருத்துவமனையில் ஓனர் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே பரத் கல்யாணின் மனைவி 7 வருடமாக கோமாவில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பரத் கல்யாணுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரவுடி பேபி ஆயிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

சின்னத்திரையின ரவுடி பேபி என்று அழைக்கப்படும் நடிகை ஆயிஷா சத்யா மற்றும் சத்யா 2 ஆகிய இரண்டு சீரியல்கள் மூலம் பிரபலமானவர். தற்போது சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர், திருமணமாகி டைவர்ஸ் பெற்றுவிட்டதாக அவரது முன்னாள காதலர் என்று கூறி வரும் தேவ் என்பவர் கூறியுள்ளார். மேலும் டிக்டாக் வீடியோ செய்துகொண்டிருந்தபோது ஆயிஷா தன்னுடன் தான் இருந்தார் என்றும், இடையில் விஷ்ணு வந்தவுடன் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்றும், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி 3-வதாக தான் என்னை காதலித்தார் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,  

அரசியல்வாதியா நடிகர் அசீம்?

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அசீம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் தாறுமாறாக நடந்துகொள்கிறார் என்று புகார் எழுந்த நிலையில், அவருக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் கடுமையாக அறிவுரை கூறியிருந்தார். இதனிடையே தற்போது அசீம் பிரபல அரசியல்வாதியின் உறவுக்காரர் என்றும், இவரும் ஒரு அரசியல் கட்சியின் உயர் பதவியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் இவரது மாமா என்றும், அசீம் ஏற்கனவே முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் சென்னை நகர இளைஞரணி பொறுப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் துணிவு படத்தில் பிக்பாஸ் அமீர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அமீர் பாவனி ஜோடி அடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முளைத்த காதல் தற்போது திருமணத்தில் முடிய உள்ள நிலையில், அமீர் தற்போது அஜித் நடித்து வரும் துணிவு படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக டப்பிங் பேசும் புகைப்படத்தை அமீர் வெளியிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ரம்பா வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து சின்னத்திரையின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். தற்போது திருமணத்திற்கு பின் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இதனிடையே நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது மகள் ஷாசா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment