Advertisment

பிளாட்பார இட்லி கடையில் வேலை... சிறகடிக்க ஆசை சீரியல் நடிகருக்கு இந்த நிலையா? வைரல் வீடியோ

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் ரோஹினி விஜயாவிடம் எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Siragadikka Aasai

சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் முத்துவின் நண்பராக நடித்து வருபவர் ப்ளாட்பார்மில் இட்லி கடை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.

இந்த சீரியலில், ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் ரோஹினி விஜயாவிடம் எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜயா செய்யும் தவறுகளை அவரது தோழி அவ்வப்போது சுட்க்காட்டி வருகிறார். அதேபோல் முத்து மீனா இருவருக்கும் இடையே மோதல் வந்தாலும், அவ்வப்போது நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

மனோஜ் – ரோஹினி இடையே ரொமான்ஸ் இல்லை என்றாலும் மோதல் அதிகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முத்துவுக்கு மீனா கார் வாங்கி கொடுத்தை பொருத்துக்கொள்ள முடியாத ரோஹினி, முத்துவுக்கு எதிராக மீனாவை தூண்டிவிட, மீனா தனது கணவர் முத்துவுக்கு ஆதரவாக பேசி நோஸ்கட் செய்துவிட்டார். அதேபோல் இவர் தவறு செய்கிறார் என்பது தெரிந்தும் அவரது தோழி அவருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்.

இந்த வரிசையில் முத்துவின் நண்பன் செல்வம், முத்துவுக்கு உதவி செய்வதும், முத்து செல்வத்துக்கு உதவி செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனிடையே முத்துவின் நண்பன் செல்வம் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் பழனியப்பன் சீரியலில் அடுத்து வரும் காட்சிகள் தொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செல்வம் இட்லி கடையில் வியாபாராம் செய்துகொண்டிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் என்ன இட்லி வியாபாரம் தொடங்கிவிட்டீர்களா என்று கேட்க, இல்லை இது சென்னையில் எனது நண்பருக்கு உதவி செய்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த காட்சி இதுதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment