250- ஆடிஷன்… பல இடங்களில் அட்ஜஸ்ட்மெண்ட் பேச்சு… எச்சரிக்கை கொடுக்கும் சீரியல் நடிகை

Tamil Serial Update : இன்ஸ்டாகிராமில் காஸ்டிங் டைரக்டர் என்று சொல்லி ஒருவர் பேசினார். அந்த நபர் என்றுடைய அடையாளத்தை துள்ளியமாக கூறினார்.

Actress Abi Navya Lifestyle : சின்னத்திரையே வெள்ளித்திரையே மீடியாவில் வாய்ப்பு தேடி வரும் பலரும் தங்களது வாழ்வில் பல்வேறு தடைகளை சந்தித்து முன்னேறியுள்ளனர். இப்படி பல தடைகளை வென்று திரையில் பிரபலமான நடிகர் நடிகையாக வலம் வரும் பலரும் தங்களது வாழ்வில் சந்தித்த பிரச்சினைகள் குறித்த ஏதாவது ஒரு தருணத்தில் மனம் திறந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் வாய்ப்பு தேடிய போது தான் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரபல சீரியல் நடிகை அபி நவ்யா மனம் திறந்து பேசியுள்ளார். சன்டிவியின் பிரியமானவள் சீரியல் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து கண்மணி,ஜீ தமிழின், சித்திரம் பேசுதடி மீண்டும் சன்டியின கயல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற இவர், செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கியவர்.

தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உள்ள அபி நவ்யா பிரபல சீரியல் நடிகர் தீபக் குமார் என்பரை காதலித்து வந்தார். ஜீதமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்னும் புன்னகை தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அபி நவ்யா, தனது திரை பயணம் குறித்து பேசியுள்ளார்.

அவர் தனது பேட்டியில்,

நான் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதுதான் பிரியமானவள் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் செய்தி வாசிப்பாளர் வாய்ப்பும் கிடைத்து வந்தது. இரண்டையும் சமமாக செய்து வந்தேன். பொதுவாக் சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் அங்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், ரொம்ப கஷ்டப்பட்டுதான் சீரியலில் நடிக்க முடியும். நான் வாய்ப்பு தேடி செல்லும்போது என் முகத்திற்கு நேராகவே அட்ஜஸ் செய்துகொள்ள தயாரா என்று கேட்டார்கள்.

கிட்டத்தட்ட 250 ஆடிசனுக்கு மேல் பல இடங்களில் சென்று பார்த்துள்ளேன். பெரும்பாலான இடங்களில் இதையே தான் சொன்னார்கள். இன்ஸ்டாகிராமில் காஸ்டிங் டைரக்டர் என்று சொல்லி ஒருவர் பேசினார். அந்த நபர் என்றுடைய அடையாளத்தை துள்ளியமாக கூறினார். அவரை நான் திட்டிவிட்டேன். அதன்பிறகுதான் அவர் போலி என்று தெரியவந்தது.

புதிதாக சினிமாவிற்குள் வர நினைக்கும் பலருக்கும் இந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. ஏமாற்றும் ஆட்களும் அதிகம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் நம்முடைய புகைப்படத்துடன் கூடிய ப்ரபைல் கேட்பார்களே தவிர வேறு எதுவும் கேட்டமாட்டார்கள். பல பெண்கள் இப்படி ஏமாற்ந்துள்ளனர். இதனால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் சினிமா உலகில் இன்னமும் மீடூ புகார் வந்துகொண்:தான் இரு்ககிறது. இதனால் பெண்கள் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress abi navya lifestyle update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com