New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Abi-Navy.jpg)
சன். டி.வி.யின் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். சைத்ரா ரெட்டி நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரபல சீரியல் நடிகர் அபி நவ்யா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது வளைகாப்பு பிரம்மாண்டாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சன். டி.வி.யின் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். சைத்ரா ரெட்டி நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரகடரில் நடித்து வருபவர் நடிகை அபி நவ்யா.
தனது நடிப்பின மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நடிகை அபி நவ்யாவுக்கு, ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை தொடரின் நாயகன் தீபக்குடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இருவருமே தங்களது சீரியலிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், அபி நவ்யா திருமணமாக ஒரு மாதத்தில் கர்பபமானார்.
தனது கர்ப்பத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அபி நவ்யாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை அபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மஞ்சள் நிற உடையில் கை நிறைய வளையலுடன் அபி நவ்யா உற்சாகமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், என்னில் பாதியும், நான் காதலிப்பதில் பாதியும் உள்ள இதனை சந்திப்பதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இன்னும் சில நாட்களே உள்ளது. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் எனக்கு எல்லாமே எல்லாமுமாக இருப்பாய் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.