scorecardresearch

ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தியா பைக் ரைடு : பயத்தில் சரவணன்… ராஜா ராணியில் அடுத்த சீன் இதுதானா?

Tamil Serial : நடிகை ஆல்யா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் ஓட்டும் கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தியா பைக் ரைடு : பயத்தில் சரவணன்… ராஜா ராணியில் அடுத்த சீன் இதுதானா?

விஜய் டிவியில் வெற்றிகரமான ஒடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் சீசன் முடிந்து தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில, ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் நாயகிக்கு திடீரென திருமணம் நட்க்கிறது.  இதன்பிறகு அவள் தனது லட்சியத்தை அடைய என்னவெல்லாம் செய்தால் எப்பதே இந்த சீரியலின் கதை.

கடந்த சில நாட்களாக சண்டையும் சச்சரவுமாக சென்ற இந்த சீரியல் தற்போது ரொமான்ஸ் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த சரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் அதிக ரசிகர்களை பெற்றுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.

இதில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடிக்கள் டன்ஸ் ஆடவது, பைக் ஓட்டுவது என அவ்வப்போது பலவித முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் தற்போது ராஜாராணி 2 சீரியல் நாயகி ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் ஓட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு ஐலா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress alya bike ride in raja rani shooting spot

Best of Express