Actress Alya Manasa Instagram Viral : வெற்றி பெற்ற சினிமா படங்களின் டைட்டில்களை வைத்து சீரியல் ஹிட் கொடுப்பதில் விஜய் டிவிக்கு நிகழர் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சினிமா டைட்டிலுடன் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்கள் என்று சொல்லாம். அநத வரிசையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரயல் ராஜா ராணி 2. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சீவ், மற்றும் ஆல்யா மானசா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ராஜா ராணி சீரியில் 2-வது சீசனாக இந்த சீரியல் ஒளிபரப்பாகிவருகிறது.
மேலும் ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போதே சஞ்சீவ், ஆல்யா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, திருமணம் செய்துகொண்டனர். திருமணமாக ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அய்லா என்ற அந்த குழந்தைக்கு சமீபத்தில் முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தற்போது ஆல்யா மானசா திருமணம் சீரியல் சித்துவுடன் இணைந்து ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும், சஞ்சீவ் சன்டிவியின் கயல் சீரியலிலும் நடித்து வரும் நிலையில், தற்போது ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரே இதனை உறுதிப்படுத்தினார்.
கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் இவர்’, விரைவில் அந்த சீரியலில் இருந்து தற்காலிகமாக வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாளனது. இதனால் அடுத்து ராஜா
அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப்போகிறீர்களா’ என்று கேட்டதற்கு, ‘இல்லை அது உண்மை அல்ல’ என்று என்று கூறியுள்ளார். தொடர்ந்து மற்றொரு ரசிகர் ‘முதல் குழந்தை சிசேரியன் பண்ணீங்க, அத பத்தி சொல்லுங்க’ என்று கேட்டதற்கு ‘ஆமாம் முதல் குழந்தை சிசேரியன் தான். ஆனால், தற்போது 2-வது குழந்தை நார்மல் டெலிவரிக்கு திட்டமிட்டு இருக்கிறேன், பாக்கலாம் ‘ என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“