சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்து வரும் நிலையில், இணையதள பயன்பாடு பெருகிவிட்ட இந்த காலக்கடத்தில் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை தேடி பார்ப்பதில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல பிரபலங்கள் தங்கள் சிறுவயது புகைப்படங்களை தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் ஒருசிலர் சிறுவயத்தில் அப்போது உள்ள முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி சீரியல் நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2017-ம் ஆண்டு விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஆலியா மானசா தான் அவர்.
ராஜா ராணி தொடரின் மூலம் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சஞ்சீவ் கார்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆல்யாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராஜா ராணி சீரியலை தொடர்ந்து, அந்த தொடரின் 2-ம் பாகமாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்திருந்தார். ஆனால் 2-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். பிரசவத்திற்கு பின் உடல்நலம் தேறிய ஆல்யா தற்போது சன்டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் முடிவடைய உள்ளதாகவுமு் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“