Advertisment

ஆல்யா மானஸாவுக்கு காலில் அடியா? பதறிய ரசிகர்கள்; நடிகை வைத்த ட்விஸ்ட்

தற்போது ஆல்யா மானசா காலில் அடிப்பட்டு நடக்க முடியமல் இருப்பது போல் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Alya Masana

நடிகை ஆல்யா மானசா

சின்னத்திரையின் முன்னணி நடிகையான ஆலியா மானசா காலில் அடிபட்டது போன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமாகி மாடலிங் துறையில் கால்பதித்த ஆல்யா மாசனா, விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை ஆல்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

முதல் குழந்தை பிறந்த பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நடிகை ஆல்யா 2-வது பிரசவம் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார். தொடர்ந்து அவருக்கு 2-வது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், ராஜா ராணி சீரியலில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சன்டிவியின் இனியா தொடரில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்ங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா மானசா அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் தனது குடும்பத்துடன் இருக்கும் வீடியோ புகைப்படங்கள் என பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4.3 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலயில், இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவதோடு மட்டுமல்லாமல் லைக்ஸை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா காலில் அடிப்பட்டு நடக்க முடியமல் இருப்பது போல் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆல்யாவுக்கு என்ன ஆச்சு என்று பதற்றமடைய உடனே ஆல்யா டான்ஸ் ஆடுகிறார். அப்போதுதான் இவர் காலில் அடிப்பட்டது போல் நடித்துள்ளார் என்று தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில், பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Alya Manasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment