scorecardresearch

வேறு ஒருவருடன் கல்யாணம்… கணவரை ‘அண்ணா’ என அழைத்து அதிர வைத்த ஆல்யா மானஸா!

இனியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சஞ்சீவ் ஆல்யாவுக்கு ஹாய் சொல்ல அவர் ஹாய் அண்ணா என்று சொல்கிறார்.

Alya
ஆல்யா மானசா

தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது என்று கூறி தனது கணவரை நடிகை ஆல்யா மானசா அண்ணா என்று அழைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் ரீல் ஜோடியாக இணைந்து பின்னாளில் வாழ்க்கையிலும் இணைந்தவர்கள் ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி. இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் ராஜா ராணி சீரியலை தொடர்ந்து சஞ்சீவ் தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா பிரசவம் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது சன்.டிவியின் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி சீரியல் மூலமே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள ஆல்யா மானசா தற்போது இனியா சீரியல் மூலம் அதை மீண்டும் தக்கவைத்து தொடர்ந்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில சமீபத்தில் இனியா கேரக்டருக்கு நாயகனுடன் திருமணம் நடந்தது.

அதே சமயம் கயல் சீரியலரில் நடித்து வரும் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் இந்த திருமணத்திற்காக ப்ரமோவை வெளியிட்டிருந்தார். இந்த ப்ரமோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே ஆல்யா மானசா தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் இனியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சஞ்சீவ் ஆல்யாவுக்கு ஹார் சொல்ல அவர் ஹாய் அண்ணா என்று சொல்கிறார். என்னது அண்ணாவா அப்படி சொல்லாதீங்க என்று சஞ்சீவ் சொல்ல, சீரியலில் எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது. அதனால் அப்படித்தான் சொல்ல முடியும் என்றதும் சஞ்சீவ் ஷாக் ஆகிறார்.

அதன்பிறகு நான் ஷூட்டிங் போகிறேன் என்று சொல்லிவிட்டு சஞ்சீவ் கிளம்ப வீட்டுக்கு வந்த தூங்குறீங்க, இல்லனா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டா வறீங்க இல்லனா கிரிக்கெட் விளையாட போறீங்க நான் எப்போ உங்களை பார்க்கிறது என்று ஆல்யா அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress alya manasa youtube video viral on social