பாக்யாவும் – ராதிகாவும் அடிக்கும் லூட்டி… ஆல்யா மானசா வைரல் வீடியோ : டாப் 5 சீரியல்

சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் அல்யா மானசாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பாக்யாவும் – ராதிகாவும் அடிக்கும் லூட்டி… ஆல்யா மானசா வைரல் வீடியோ : டாப் 5 சீரியல்

புதிய சீரியலில் ரோஜா நாயகி டைட்டில் இதுதானா?

சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை பிரியங்கா நல்காரி அடுத்து எந்த தொடரில் நடிப்பார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அவர் ஜி தமிழின் புதிய தொடரில் நடிக்க உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இந்த சீரியலுக்கு சீதாராமன் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலில் எலும்பு முறிவு – ஆல்யா மானசா வீடியோ

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலின் 2-ம் பாகத்தில் நடித்து வந்தார். அதன்பிற பிரசவம் காரணமாக தொடரில் இருந்து வெளியெறிய அவர் தற்போது சன்டிவியின், இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்துர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கபடி விளையாடும்போது எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த வீடியோவை ஆல்யா வெளியிட்டுள்ளார்.

பாக்யாவும் – ராதிகாவும் அடிக்கும் லூட்டி

விஜய் டிவியின் பாக்கிய லட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கோபி தொடர்ந்து பாக்யாவுக்கு கஷ்டங்களை கொடுத்துக்கொண்டே வருகிறார். அவருக்கு பக்கபலமாக ராதிகா இருந்து வருகிறார். சீரியலில் இப்படி எதிராக இருந்தாலும், படப்பிடிப்பு செட்டில் இருவரும் அடிக்கும் லூட்டி எல்லைகளை கடந்து செல்வதாக சொல்லப்படுகிறது. பாக்யா கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா, ராதிகா கேரக்டரில் நடித்து வரும் ரேஷ்மா இருவரும் ஜாலியாக வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சீரியல் நடிகை?

விஜய் டிவியின் மாப்பிள்ளை, ஆயுத எழுத்து மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜனனி, கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்திருந்தார். அதன்பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்து வரும் அவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். தான் மேக்கப் போடும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் அவர் தற்போது சுருள் முடியுடன் வித்தியாசமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துவிட்டீர்களா என்று கேட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 கிரான்ட் பினாலே

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 5 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்கள் பங்ககேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, சிவின், அசீம், மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதி போட்டியாளராக உள்ளனர். இதில் இன்று நடைபெறும் இறுதி நாளில் யார் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசு பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress alya viral video baakiya and radhika joined

Exit mobile version