சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது பிரசவ வலியில் இருந்து குழந்தை பிறந்து கையில் ஏந்துவரை நடந்த சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியே பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியின் பாண்டிவர் இல்லம் சீரியலில் நடித்து வருபவர் அனு சுலாஷ். விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆன இவர், அடுத்து மெல்ல திறந்தது கதவு தொடரில் நடித்தார். அதன்பிறகு சன்டிவி ஜிதமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்த அனு தற்போது சன்டிவியின் பண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு அனு விக்னேஷ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு கர்ப்பமானார். தொடர்ந்து தனது கர்ப்பகால போட்டோஷூட் படங்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்த அனுவுக்கு கடந்த மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அனுவின் சமீபத்திய வீடியோவில், எங்கள் சன்ஷைன் பேபிக்கு, இது உனக்காக, என் அன்பே, உங்கள் அம்மா & அப்பாவாக எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் அனுவுக்கு பிரசவ வலி வந்தது முதல் குழந்தை பிறநத அதை கையில் ஏந்தும் வரை நடந்த சம்பவங்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இதில் பிரசவ வலியால் அவதிப்படும், அனுவை மருத்துவமனையில் அனுமதிக்கும் அவரது காதல் கணவர் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு உதவி செய்கிறார். அப்போது பிறந்கிறது. குழந்தையை தாய் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதால் அந்த தருணம் மகிழ்ச்சியாக மாறுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அனுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil