பார்க்க குழந்தை மாதிரியே இருக்கீங்க அர்ச்சனா... சீரியல் நடிகையின் வைரல் போட்டோ

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பார்க்க குழந்தை மாதிரியே இருக்கீங்க அர்ச்சனா... சீரியல் நடிகையின் வைரல் போட்டோ

சின்னத்திரையின் விஜய் டிவி சீரியல்களில் ராஜா ராணிக்கு முக்கிய இடம் உண்டு. குடுப கதையுடன் பெண்கள் சாதனையை நோக்கி நகரும் கதையசம் கொண்ட இந்த சீரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment
publive-image

பொதுவாக திரைப்படங்களில் வெளியில் இருந்து வில்லன் வருவார் என்றால் சீரியலிகளில் ஹீரோ ஹீரோயின் வீட்டுக்குள்ளே வில்லன்கள் இருப்பார்கள். அப்படிதான் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா.

publive-image
Advertisment
Advertisements

கேரக்டர் பெயர் அச்சனா என்றால் அதில் நடித்து வரும் நடிகை பெயரும் அர்ச்சனா. அர்ச்சனாவாக நடித்து வந்த விஜே அர்ச்சனா சமீபத்தில் இந்த தொடரில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு பதிலாக அர்ச்சனா ரோலில் நடிக்க வந்தவர் தான் அர்ச்சனா குமார்.

publive-image

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர், தொடர்ந்து விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

publive-image

இதில் ஈரமான ரோஜாவே சீரியலில் இவர் நடித்த தேனு கேரக்டரர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

publive-image

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் இருந்து விஜே அர்ச்சனா விலகிய நிலையில், அந்த வாய்ப்பு இந்த அர்ச்சனாவுக்கு கிடைத்துள்ளது. தனது வில்லத்தனத்தின் மூலம் அந்த கேரக்டரை அர்ச்சனா சிறப்பாக செய்து வருகிறார்.

publive-image

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தனது புகைப்டம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani 2 Archana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: