/indian-express-tamil/media/media_files/sxZCvClKPphJx3zkJwPp.jpg)
சீரியல் நடிகை அர்ச்சனா குமார்
/indian-express-tamil/media/media_files/snap1.jpg)
சென்னையில் பிறந்து வளர்ந்து அர்ச்சனா குமார், சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது அர்ச்சனா, மீடியா மற்றும் நடனம் மீது அதிக ஆர்வமாக இருந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/snap12.jpg)
இதன் காரணமாக ஜீ தமிழ் டிவியில், ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் நடிகர் சித்தார்த் குமாருடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.
/indian-express-tamil/media/media_files/snap13.jpg)
அதன்பிறகு அர்ச்சனா குமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார்.
/indian-express-tamil/media/media_files/snap14.jpg)
தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில், தேனு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் அர்ச்சனாவுக்கு நிறைய ரசிகர்களை தேடித் தந்தது.
/indian-express-tamil/media/media_files/snap15.jpg)
விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடித்து வந்த வி.ஜே.அர்ச்சனா அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து அர்ச்சனா குமார் அந்த கேரக்டரில் நடிக்க வந்தார்.
/indian-express-tamil/media/media_files/snap16.jpg)
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா குமார் அவ்வப்போது புகைப்படங்கள், ரீல்ஸ், போட்டோஷூட்களை பதிவிட்டு, ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருப்பார்.
/indian-express-tamil/media/media_files/snap17.jpg)
குறிப்பாக அர்ச்சனாவின் சுருட்டை முடிக்காகவே, இணையத்தில் பலரும் இவரை தேடி தேடி பார்க்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அர்ச்சனா தனது பெரிய அண்ணனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/snap18.jpg)
இந்த புகைப்படங்கள் தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/snap19.jpg)
இதனிடையே தற்போது புல்லட்டில் இருந்தபடி அர்ச்சனா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/snap10.jpg)
அதோடு மட்டுமல்லாமல் அர்ச்சனாவின் சுருட்டை முடிக்காகவே, இணையத்தில் பலரும் இவரை தேடி தேடி பார்க்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.