பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அருண் பிரசாத் தற்போது தனது காதலியுடன் போட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்பியன் முதன்மை கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியலில் ரூபாஸ்ரீ முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த பரபரப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் ரோஷ்னி விலகியதை தொடர்ந்து, வினுஷா தேவி கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அடுத்து பாரதி கண்ணம்மா 2-வது சீசன் தொடங்கப்பட்டது. இதில் நாயகியாக விணுஷா தேவி நடித்து வந்த நிலையில், பாரதியாக நடிகர் சுப்பு சூரியன் நடித்திருந்தார். முதல் சீசனில் நாயகனாக நடித்திருந்த அருண் பிரசாத், மேயாத மான் என்ற படத்தில் நாயகனின் நண்பராக நடித்திருந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் அவர் எந்த தொடரிலும் நடிக்கவில்லை.
இதனிடையே விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக அர்ச்சனா ரவிச்சந்திரன் – அருண் பிரசாத் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து டைட்டில் வென்ற நடிகையான அர்ச்சனா, தற்போது தனது காதலர் அருண் பிரசாத்துடன் ஏற்காடு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இருவரும் போட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுவரை வதந்தியாக இருந்த அர்ச்சனா – அருண் காதல் தற்போது உறுதியாகிவிட்டது என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“