New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Karthikai-deepam.jpg)
கார்த்திகை தீபம் நடிகை ஆர்த்திகா
தீபாவின் திறமை மறைக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்த சீரியலும் தீபா கேரக்டரும் விரைவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிட்டது
கார்த்திகை தீபம் நடிகை ஆர்த்திகா
ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஆர்த்திகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிஜவாழக்கையில் மிகவும் கலரான நடிகை ஆர்த்திகா, கார்த்திகை தீபம் சீரியலின் தீபா கேரக்டருக்காக தன்னை கருப்பாக மாற்றிக்கொண்டுள்ளார். இந்த கேரக்டருக்கும் சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாடகியாக வரும் தீபா அழகாக இல்லை என்பாதால், அவரை பின்னால் வைத்துக்கொண்டு பாட வைத்து முன்னாள் ஒரு அழகான பெண் பாடுவது போல் செய்து அவரின் வறுமையை பயன்படுத்தி கொள்கின்றனர்.
தீபாவின் திறமை மறைக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்த சீரியலும் தீபா கேரக்டரும் விரைவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிட்டது
இந்த சீரியலின் நாயகன் கார்த்திக் ராஜ் நடித்த பிளாக் அன்ட் வொயிட் என்ற படத்தில் நடித்திருந்த ஆர்த்திகா தற்போது அதே கார்த்திக் ராஜூக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.
சேது படத்தில் நாயகியாக நடித்த அபிதாவும் ஆர்த்திகாவும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அபிதா இவருக்கா சிபாரிசு செய்து கார்த்திகை தீபம் சீரியல் வாய்ப்பை வாங்கி கொடுத்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்திகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஆயில் ஸ்கின்னுடன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.