தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை சீரியல் நடிகை தவறவிட்டுள்ளார். சீரியல் ஷூட்டிங் மற்றும் படத்தின் ஷூட்டிங் இரண்டுமே ஒரே நேரத்தில் வந்ததால், அந்த வாய்ப்பை தவறிவட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். கன்னட சூப்பர் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ஆகியோர் கேமியோ ரோல்களில் நடித்திருந்த இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். அனிருத் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
மேலும், தெலுங்கு நடிகர், சுனில், ரம்யா கிருஷ்ணன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்த நிலையில், ரஜினியின் மருமகளாக மிர்னா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவருமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தனர்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்க்கு மருமகளாக நடித்த மிர்னா, சிறப்பாக நடித்திருந்தாலும், அந்த கேரக்டரில் நடிக்க முதலில் பேசப்பட்ட நடிகை சைத்ரா ரெட்டி தான். ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் அறிமுகமான சைத்ரா ரெட்டி தற்போது சன். டிவியின் கயல் சீரயலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.
இதனிடையே ஜெயிலர் படத்தின் நடிகர்கள் தேர்வின்போது, ரஜினிகாந்தின் மருமகள் கேரக்டரில் நடிக்க இயக்குனர் நெல்சன் முதலில், சைத்ரா ரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், தான் நடித்து வரும் கயல் சீரியல் ஷூட்டிங் மற்றும் ஜெயிலர் பட ஷூட்டிங் இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெறும் என்பதால், சீரியலை விட மனமில்லாமல் சைத்ரா ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“