Advertisment

முருகர் வேடத்தில் க்யூட்டாக நிற்கும் குழந்தை: இந்த பாரதி கண்ணம்மா நடிகை யாருன்னு தெரியுதா?

சமூகவலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமான இவர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

author-image
WebDesk
New Update
vinusha devi

vinusha devi

சமீப காலமாக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களில் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவரா சிறுவயதில் இப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் பல புகைப்படங்கள் இருக்கிறது.

Advertisment

அந்த வகையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகவலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமான இவர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் மூலம் பிரபலமான இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நடிகை பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா தேவிதான். திமிரு படத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டி போன்று நடித்து காட்சி டிக்டாக்கில் பிரபலமான இவர், பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதை தொடர்ந்து கண்ணம்மாவாக நடிக்க வந்தார்.

publive-image

ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்து தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கண்ணம்மா ரோலில் ரோஷ்னியே நடித்து வருகிறார். சமுகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் தற்போது இவரது சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment