ஒரே சீரியல் தான்; நடந்து சென்றே ரசிகர்களை கவர்ந்தவர் இந்த சிறுமி: இப்போ சினிமாவில் ஸ்டார்!

ஒரே சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இந்த நடிகை அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிவிட்டார், இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஒரே சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இந்த நடிகை அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிவிட்டார், இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
roshni haripriyan

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்களை விடவும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இல்லத்தரசிகள் பலரும், சீரியல்களை விரும்பி பார்ப்பது தான். அதேபோல் சீரியல்கள் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சீரியல்களை ரசிக்கும் ரசிகர்கள் அதில் நடித்து வரும் நடிகர் நடிகைளின் தனிப்பட்ட விபரங்களை தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள்.

Advertisment

அந்த வகையில், சின்னத்திரையில், சீரியல் நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒரே ஒரு சீரியலில் மட்டுமே நடித்திருக்கும் இந்த நடிகை, தான் நடித்த அந்த ஒரு சீரியலில் கூட பாதியில் விலகினார். ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அந்த ஒரு சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காத இந்த நடிகை தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் சின்ன கேரக்டரில் நடித்திருந்த ஒரு படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல் சீரியலில் நடிக்கும்போது நடந்து சென்றே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் இந்த நடிகை. அவர் யார் தெரியுமா? வேறு யாரும் இல்லை சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் தான். இவர் நடித்த ஒரே சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்.

top 20 Most Desirable Woman On Tamil Television 2020, டாப் 20 டிவி பிரபல நடிகைகள், barathi kannamma roshni haripriyan, பாரதி கண்ணம்மா, ரோஷ்னி ஹிரிபிரியன், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், டிடி, ஷிவானி நாராயணன், ஆல்யா மானசா, top 20 tv actress, ramya pandian, shivani narayanan, ayesha, alya manasa, dd, chandini tamilarasan

Advertisment
Advertisements

இந்த சீரியலிலும் முழுதாக நடிக்காத இவர், பாதியில் சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. பாரதி கண்ணம்மா சீரியிலில் நடித்தபோது, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு, இவர், வீட்டை விட்டு வெளியேறி நடந்து செல்லும் காட்சி, பெரும் வைரலாக பரவியது. நெட்டிசன்கள் பலரும் இவர் நடந்து செல்லும் போட்டோவை வைத்து மீம்ஸ்கள் க்ரியேட் செய்து வைரலாக பரப்பினர். பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

சூரி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த கருடன் படத்தில், வில்லன் உன்னி முகுந்தனின் மனைவி கேரக்டரில் ரோஷ்னி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். தற்போது இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மெட்ராஸ் மேட்னி என்ற படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Roshni Hari Priyan Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: