scorecardresearch

வித விதமான புடவை… வித்தியாசமான பார்வை… கயல் நாயகியின் போட்டோ கலெக்ஷன்ஸ்

Tamil Serial Update : தமிழ் சின்னத்திரையில் முக்கிய நாயகியாக வலம் வரும் சைத்ரா தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

Tamil Serial Actress Photo gallery : ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. இந்த சீரியல்ல நெகடீவ் கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த யாரடி நீ மோகினி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. முக்கோன காதல் கதையை மையமாக வைத் திரைக்கரை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியலில் நாயகன் நாயகியைவிட வில்லி வேடத்தில் சைத்ராவின் கேரக்டரே ரசிகர்கள் பெரிய ரீச் ஆனது.

இதன் மூலம் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நாயகியாக வலம் வரும் சைத்ரா தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். முதல் சீரியலில் சீரியஸான வில்லி என்றாலும், கயல் சீரியலில் பாசமான குடும்பத்தை கவனிக்கும் மூத்த பெண்ணாக நடித்து வருகிறார்.

இதன் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்துள்ள சைத்ரா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம்.

அந்த வகையில் சைத்ரா சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress chithra reddy photo gallery update in tamil

Best of Express