ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்: உதவி இயக்குனர் மீது சீரியல் நடிகை புகார்

உதவி இயக்குநர் தன்னையும் தனது தங்கையையும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக சீரியல் நடிகை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரபரப்பாகும் சீரியல்கள் சிலவற்றில் நடித்து பிரபலமானவர் அந்த சீரியல் நடிகை (வயது 24). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அதன்பிறகு இருவருக்கும கருத்து வெறுபாடு ஏற்பட்டு பிரிந்த்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சீரியலில் நடித்து வரும் அந்த நடிகை தான் நடித்து வரும் சீரயலில் உதவி இயக்குராக பணியாற்றி வரும் ஒருவர் மீது காதலில் விழுந்த்தாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், நடிகையின் முன்னாள் திருமணம் குறித்து உதவி இயக்குநரான காதலனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக நடிகயின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் நடிகையின் உறவினர்கள் தாக்கியதால், காயமடைந்த உதவி இயக்குநர் பதிலுக்கு தனது உறவினர்களை அழைத்து வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார்.

இதனால் இரு குடும்பத்திற்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், இருவரும் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது திடீர் திருப்பமாக அந்த சீரியல் நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகை கூறுகையில், நாள் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும்,சீரியலில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வருபவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். ஆனால் உதவி இயக்குநருக்கு வேலை பறிபோனதால் செலவுக்காக தன்னிடம் இருந்து 2.5லட்சம் ரூபாய் வரை பணத்தை கடனாக பெற்று கொண்டு, மீண்டும் 5 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் என கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து சென்னை முழுவதும் சுற்றி துன்புறுத்தினார்.

மேலும் 5 லட்ச ரூபாய் கடனாக தரவில்லை யென்றால் அரை நிர்வாண வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறினார். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி தனது தந்தை, தங்கையுடன் காரில் சென்ற போது அந்த உதவி இயக்குநர், அவரது தந்தை, தம்பி ஆகியோர் இணைந்து காரை வழி மறித்து தனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு, தங்கையின் உடையை கிழித்து மானபங்கபடுத்தினர்.

இது தொடர்பாக மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது உதவி இயக்குநரின் தந்தை காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிப்புரிவதால் காவல் ஆய்வாளர் தன்மீது விபச்சார வழக்கு போடுவதாக மிரட்டினார். பின்னர் தாக்கிய வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததால் ஆய்வாளர் உதயகுமாரை தவிர்த்து எளிதில் வெளிவரக்கூடிய வழக்குகளை பதிவு செய்து 3 பேரை ஜெயிலுக்கு அனுப்பி தற்போது பெயிலில் வெளிவந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்று தொடர்ந்து உதவி இயக்குநரின் தந்தை, காவல் ஆய்வாளர் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது தங்கையை மானபங்கபடுத்திய உரிய வீடியோ ஆதாரங்களை வழங்கியும் காவல் ஆய்வாளர் பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். உடனடியாக இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து,கொலை மிரட்ட விடும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக நடிகை கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress compliant to asst director for sexual harassment

Next Story
தப்பான பொருளை எடுத்தா கீழே வச்சிருங்க!’ டிடி கூறும் வாழ்க்கை பாடம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com