சன்டிவியின் வானத்தை போல சீரியலில் நடித்து வந்த நடிகை தேப்ஜானி தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவி சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இதில் ப்ரைம் டைம் சீரியலுக்கு இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ரசிகர்கள் என்று சொல்லாம். அந்த வகையில் சன்.டிவியின் ப்ரைம் டைம் சீரியல் வானத்தைப்போல. தமன், ஸ்வேதா அண்ணன் தங்கையாக நடித்து வந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில், சில மாதங்களிலேயே தமன் ஸ்வேதா அடுத்தடுத்து சீரியலில் இருந்து விலகினர். இதனால் தமனின் சின்ராசு கேரக்டரில் சின்னத்திரை பிரபலம் ஸ்ரீகுமார் நடித்து வரும் நிலையில், ஸ்வேதாவின் துளசி கேரக்டரில், மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பல கேரக்டர்கள் மாற்றம் இருந்தாலும் சீரியலுக்கு உண்டான ரசிகர்களின் வரவேற்பு குறையாமல் உள்ளது.
இந்நிலையில், தற்போது வானத்தைபோல சீரியலில் இருந்து மேலும் ஒரு நடிகை விலகியுள்ளார். சந்திய கேரக்டரில் நடித்து வந்த நடிகை தேப்ஜானி தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2013-ம் ஆணடு ராஜீவ் சட்டர்ஜி இயக்கத்தில் வெளியான நாட் அவுட் என்ற படத்தின் மூலம் அறிமுகமான தேப்ஜானி, அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து ராசாத்தி என்ற சீரியலின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமான தேப்ஜானி வானத்தை போல தொடரில் சந்தியா கேரக்டரில் நடித்து வந்தார். இதற்கிடையில், தேப்ஜானி நடித்து வந்த சந்தியா கேரக்டரில் அவருக்கு க்கு பதிலாக நடிகை காயத்ரியை நடிக்க வைக்க நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வானத்தைப் போல படத்தின் கதை சின்ராசு மற்றும் அவரது சகோதரி துளசி இடையேயான நெருங்கிய பிணைப்பைப் பற்றியது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இருவரும் பாட்டியிடம் வளர்கின்றனர். இதில் துளசிக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், இருவருக்கும் இடையேயான பாசப்போரட்டம் தான் வானத்தைப்போல சீரியலின் மீதிக்கதை.
இதனிடையே சீரியலில் இருந்து விலகியது குறித்து நடிகை தேப்ஜானி தனது சமூகவலைதள பதிவில், என்னை நன்றாக நடத்திய அன்பான குழுவிற்கு நன்றி. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரை நான் இங்கு சந்தித்தேன். அவர்கள் என் நலம் விரும்பிகள். மான்யா ஆனந்த், ஸ்வேதா கெல்கே மற்றும் சாந்தினி பிரகாஷ் ஆகியோருடன் பணிபுரிவதை நிச்சயமாக மிஸ் செய்வேன். ஆனால், நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். உங்கள் நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிஸ் யூ ஆல் என்று கூறி இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil