ஷபானா திடீர் விலகல்... வானத்தைப்போல நடிகை ரீ-என்ட்ரி: மிஸ்டர் மனைவி சீரியல் அப்டேட்

சன் டி.வியின் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து ஷபானா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வானத்தைப்போல சீரியலில் நடித்து வந்த நடிகை ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

சன் டி.வியின் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து ஷபானா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வானத்தைப்போல சீரியலில் நடித்து வந்த நடிகை ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MR Manaivi Shaban

மிஸ்டர் மனைவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டி.வியின் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வந்த நடிகை ஷபானா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ஷபானா. 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சீரியல் முடிவுக்கு வந்த்தை தொடர்ந்து ஷபானா அடுத்து சன்டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஷபானா அந்த சீரியலில் இருந்து விலகுதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றாலும் இந்த சீரியலில் இருந்து இரண்டு முக்கிய காரணத்தால் நான் விலகுறேன். இந்த சீரியலில் நான் நடித்து வந்த அஞ்சலி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது. புதிய ப்ராஜெக்ட் காரணமாகவும்புதிய கேரக்டர் காரணமாகவும் நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருந்தார்.

Debjani Modak

Advertisment
Advertisements

ஷபானா திடீரென மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகியதால் அடுத்து அவரது அஞ்சலி கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் நடித்து வரும் நடிகை தேப்ஜானி மோடக் தான் அடுத்து ஷபானாவின் அஞ்சலி கேரக்டரில் நடிக்க உள்ளதாகப தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பெங்காலி சீரியலில் நடித்து வரும் தேப்ஜானி மோடக் ஷபானா இடத்தை பூர்த்தி செய்வாரா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் தேப்ஜானி மோடக் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட மிஸ்டர் மனைவி சீரியலில் பவன் ரவீந்திரா நாயகனாக நடித்து வரும் நிலையில், சீரியல் ஓராண்டை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: