சின்னத்திரை நடிகை தீபா தன்னுடன் சில நடிகைகளை சேர்த்துக்கொண்டு, தொட்டியம் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், தனியாக முருகன் கோவில் கட்டியுள்ள நிலையில், இந்த கோவிலுக்கு வரும் செப்டம்பர் 5-ந் தேதி கும்பாவிஷேகம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அன்பே சிவம் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தீபா. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் தீபா, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார், இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். குறிப்பாக இவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 5-ந் தேதி திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே, உள்ள ஏலூர்பட்டி பகுதியில் உள்ள புதிதாக காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாவிஷேகம் நடைபெற உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்ந்து தனது சக சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து கட்டிய கோவிலின் கும்பாவிஷேகத்தை நடத்துவதற்காக மடிப்பிச்சை எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
நான் ஒரு தீவிர முருக பக்தை. எனக்கு முருகனை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறபோது, அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கு தங்கிவிட்டு வருவேன் அப்போது என் கவலைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். சில மாதங்களுக்கு முன்பு மாங்காடு காமாட்டி அம்மன் கோவிலுக்குபு சென்றபோது, சுப்பிரமணி என்ற சாமியாரை சந்திதேன். அவர்தான் காசி விஸ்வநாதர் கோவில் கட்டுவது குறித்து என்னிடம் சொன்னார்.
அந்த கோவிலில் முருகன் மற்றும் விநாயகருக்கு தனியாக சன்னதி அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகு சில நாட்களில் என் கனவில் ஒரு குரல் கேட்டது. அதில் முருகனுக்கு கோவில் எழுப்ப நீ அங்கே செல் என்று சொன்னது. இது முருகனே வந்து சொன்னது போல் உணர்ந்ததால், அங்கே கோவில் கட்ட முயற்சி செய்ய தொடங்கினேன். நான் தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதால், எனக்கு தெரிந்தவர்களிடம் பேசி வேலைகளை தொடங்கினேன்.
இதில் மெட்டிஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, நடிகர் அழகப்பன் ஆகியோர் இந்த கோவிலை எழுப்ப உதவி செய்தனர். பலரின் உதவியால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் கும்பாவிஷேகம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை தீபா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“