அன்பே வா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை டெல்னா டேவிஸ் தற்போது சரிகம நிறுவனம் தயாரிப்பும் புதிய சீரியலில், நடிகர் சல்மானுல்வுடன் இணைந்து நடிக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில், பல சீரியல்களை தயாரித்து அதில் பல நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை சரிகம நிறுவனத்திற்கு உண்டு. கயல் மற்றும் எதிர்நீச்சல் போன்ற பிரபலமான சீரியல்களை இந்நிறுவனம் தயாரித்த பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. காதலை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில், டெல்னா டேவிஸ் மற்றும் சல்மானுல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். ஒரு சிறிய நகரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அடக்கமான பெண்ணுக்கும் ஒரு பணக்கார தொழிலதிபருக்கும் இடையே காதல் மலர்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் இந்த சீரியலின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த சீரியலில், வி.ஜே.அக்சயா, மோகன் குமார் நடிகர்களுடன் இணைகிறார்.
2020 இல் 'அன்பே வா' சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற டெல்னா டேவிஸுக்கு, 'சரிகம' நிறுவனம் அவரது கேரியரில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பு, கவனம் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து, வரும் இந்த சீரியல், தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'சரேகம' நிறுவனம் இந்த சீரியலின் ஒளிபரப்பை தொடங்கும்போது, ரசிகர்கள் தங்கள், காதல், சூழ்ச்சிகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த ஒரு பயணத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சீரியலின் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டெல்னா டேவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“