Advertisment

படங்கள் தராத வெற்றி... சீரியலில் முன்னணி நாயகி... அன்பே பூமிகாவின் லைப் ஸ்டோரி

Tamil Serial Update : இவரின் நடன திறமையை பார்த்த பிரபல மாடலிங் நிறுவனம் இவரை ஹோம்லி லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி அதனை இணைதளத்தில் பதிவிட்டுளளனர்

author-image
WebDesk
New Update
படங்கள் தராத வெற்றி... சீரியலில் முன்னணி நாயகி... அன்பே பூமிகாவின் லைப் ஸ்டோரி

Serial Actress Delna Davis Lifestyle update : தற்போதைய நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் பலரும் தங்களது நடிப்பு திறமைகைளை வெளிப்படுத்தி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக வெள்ளித்திரையை விட சின்னத்திரையிலே பல நாயகிகள் புதுமுகங்களாக அறிமுகமாகி வருகின்றனர். முன்பெல்லாம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத பலரும் சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று வருவார்கள்.

Advertisment

ஆனால் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் பல நாயகிகள் ஜொலித்து வருகினறனர். இதில் சிலர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தாலும் சினிமா தராத புகழை சின்னத்திரை சீரியல் பெற்று தந்துவிடுகிறது. அந்த வகையில் சினிமாவில் அறிமுகமானாலும் சீரியல் என்டரி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டெல்னா டேவிஸ்.  

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் முன்னணி கேரக்டராக பூமிகாவாக நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ள டெல்னா டேவிஸ் முதலில் அறிமுகமானது சினிமாவில் தான் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விடியும் வரை பேசு என்ற படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து பட்ர, கவுண்டமணியுடன் 49ஓ விதார்த்துடன் குரங்கு பொம்மை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார்.

முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொண்ட டெல்னா டேவிஸ், கேரளாவில் தனது அரங்கேற்றத்தை நடத்தியுள்ளார். அதில் இவரின் நடன திறமையை பார்த்த பிரபல மாடலிங் நிறுவனம் இவரை ஹோம்லி லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி அதனை இணைதளத்தில் பதிவிட்டுளளனர். அந்த புகைப்படத்தை பார்த்த சில இயக்குநர்கள் இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். அப்படி இவருக்கு கிடைத்தது தான் குரங்கு பொம்பை. விதார்த் பாரதிராஜா ஆகியோருடன் இணைந்து நடித்தார்.

அதன்பிறகு கவுண்டமணி நாயகனாக நடித்த 49 ஓ படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். ஆனாலும் அவருக்காக வெற்றி கிடைக்காத நிலையில், இடையில் ஒரு சில வருடங்கள் காணாமல்போன அவர், அந்த இடைவெளியில் பிஎல் பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு கொரோனா தொற்றை எதிர்கொண்ட அவர் அத்து என்ன செய்யலாம் என்று யோசித்தக்கொண்டிருந்தபோது சன்டிவியின் அன்பே வா சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள டெல்னா டேவிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளார்.

இந்த சீரியலில் இவருக்கும் நாயகன் வருணுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள டெல்னா அடிக்கடி போட்டஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. சினிமாவில் முதலில் அறிமுகமானாலும் சீரியலே அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Anbe Vaa Serial Delna Davis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment