சின்னத்திரையில் நடித்து சாதிக்கும் பல நடிகைகள் அடுத்ததாக வெள்ளித்திரைக்கு வர ஆசைப்படுவது வழக்கம் தான். அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தவர் நடிகை தேவி பிரியா. சின்னத்திரையில் நடித்து சாதிக்கும் பல நடிகைகள் அடுத்ததாக வெள்ளித்திரைக்கு வர ஆசைப்படுவது வழக்கம் தான். அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தவர் நடிகை தேவி பிரியா.
சின்னதிரையில் இருந்து பெரிய திரைக்கு பல நடிகைகள் வந்து சாதித்துள்ளனர். அந்த வகையில் வந்தவர் தேவி பிரியா. சென்னையில் பிறந்த இவர் தமிழில் வெளியான ஊரு விட்டு ஊரு வந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சக்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இந்த சீரியலில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனது திறனை நிரூபித்தார். இந்த சீரியலுக்கு பிறகு சின்னத்திரையில் அவருக்கான பல வாய்ப்புகள் குவிந்த நிலையில், நிகழ்ச்சிகளிலும் வாய்ப்புகள கிடைத்தது. அதே சமயம் பெரும்பாலும் வில்லி வேடத்திலேயே நடித்து வந்தவர் தேவி பிரியா.
நடிப்பில் தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர்களை கச்சிதமாக நடித்து புகழ் பெற்றுள்ள நடிகை தேவி பிரியா, கடந்த 2009-ம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றுள்ளார். அதேபோல் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், இவர் பெரும்பாலும் வில்லி வேடத்தில் நடித்து வந்ததால் இல்லத்தரசிகள் மத்தியில் நெகடீவ் விமர்சனங்களையே பெற்றிருந்தார்.
90-ஸ் கிட்ஸ்களில் பேவரெட் சீரியல் நடிகையாக வலம் வந்த தேவி பிரியா சமீபத்தில் நிறைவடைந்த சன்டிவியின் பூவே உனக்காக சீரியலில் கூட வில்லியாக நடித்திருந்தார். ஆனால் தற்போது தேவி பிரியா புதிதாக நடித்து வரும் சீரியலில் பாசிட்டீவ் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவியில் அடுத்து புதிதாக 2 சீரியல்கள் வெளியாக உள்ளது. இதில் ஆனந்த ராகம் என்ற சீரியலில் மகாதேவி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். செம்பருத்தி சீரியலில் சாம் என்ற கேரக்டரில் நடித்திருந்த ஷியாம்ஜி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“