ஜீ தமிழின் கனா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற நடிகை தர்ஷனா அசோகன் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'நீதானே எந்தன் பொன்வசந்தம்' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன். ஜெய் ஆகாஷ், நிவாஷினி திவ்யா மற்றும் சோனியா போஸ் ஆகியோர் நடித்த இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, ஜீ தமிழின் கனா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தர்ஷனா அசோகன் பிரபலமானார். அவரது கேரக்டர் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இதனிடையே திருமணம் காரணமாக சமீபத்தில், கனா சீரியலில் இருந்து விலகிய நடிகை தர்ஷனா அசோகன், தனது காதலரை திருமணம் செய்துகொண்டார். தனது திருமண நாள் புகைப்படங்களை தர்ஷனா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்திருந்த நடிகை சுவாதி கோண்டே, "மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இவர்களுக்கு திரையுலக நண்பர்கள் பார்வதி வெங்கிடராமன், பவன் ரவீந்திரன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் கலந்து கொண்டனர். தர்ஷனாவின் திருமண விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லவ்வி-டோவி தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு குளிர் மற்றும் வண்ணமயமான பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“