ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியை நேரில் கண்டு ரசித்த சீரியல் நடிகை தர்ஷனா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிக்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர். ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலங்களில் நடத்தப்படும் இந்த தொடரின் 17-வது சீசன் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 வெற்றி 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் சென்னை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே சென்னை அணி கடந்த 3 போட்டிகளையும் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. சி.எஸ்.கே விளையாடும் போட்டியை பார்க்க, சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மே 1-ந் தேதி நடைபெற்ற பஞ்சாப் – சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க, பிரபல சீரியல் நடிகை தர்ஷனா வந்திருந்தார். சென்னை அணி விளையாடும்போது இவர் கொடுத்த கியூட் ரியாக்ஷன்ஸ் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது ரியாக்ஷன் தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. சி.எஸ்.கே எனது ஃபேவரெட். கடந்த முறை லக்னோ அணிக்கு எதிரான மேட்ச் பார்த்தேன்.
அந்த போட்டியில் சென்னை தோற்றுவிட்டதால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை பார்க்க வந்தேன். எனக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம் கிரி்க்கெட் பார்க்க வருவேன். எனது புகைப்படத்திற்கு இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கவில்லை. ஏற்கனவே தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் என்னை பிரபலமாக்கினார்கள். அதேபோல் இப்போது மீண்டும் பிரபலமாகியிருக்கிறேன் என்று தர்ஷனா கூறியுள்ளார்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் நடித்து வந்த நடிகை தர்ஷனா அதில் இருந்து விலகினார். தற்போது சன்டிவியின் பூவா தலையா சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“