scorecardresearch

குழந்தை பிறந்தவுடன் விலகிய நடிகை : தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் சோகம்

ஃபேஷன்’ டிசைனிங்காக சென்னை வந்த இவருக்கு தொகுப்பாளினி வேலை கிடைத்துள்ளது.

Dhakshna Sripaul
தமழிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபால் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது வழக்கமான ஒன்று. இதில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களை அந்த சீரியலோடு ஒன்றிவீடம் அளவிற்கு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும். அப்படி ஒரு சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.

பிரபல சீரியல் நடிகர் தீபக், நட்சத்திர நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் வசுந்தரா (வசு) என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தர்ஷனா ஸ்ரீபால். வட இந்தியாவை சேர்ந்த இவர், திருச்சியில் தனது படிப்பை முடித்து ஃபேஷன்’ டிசைனிங்காக சென்னை வந்துள்ளார். அப்போது சன்டிவியில் இவருக்கு தொகுப்பாளினி வேலை கிடைத்துள்ளது.

அதனை ஏற்று ஆதித்யா சேனலில் வேலை செய்த இவருக்கு ராதிகாவுடன் சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் சாதுவாக இருந்து பிறகு வில்லியாக மாறும் கேரக்டரில் சிறப்பாக நடித்த தர்ஷ்னாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார்.

இந்த சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வரும் நட்சத்திரா நாகேஷை விடவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான தர்ஷ்னா தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகியுள்ளார். தற்போது தர்ஷ்னா நடித்து வரும் வசுந்தரா கேரக்டருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இதுவரை அவர் காட்சிகள் வராத நிலையில், அடுத்து வசுந்தரா கேரக்டரில் நடிக்கும் நடிகையுடன் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகை தர்ஷ்னா விலகலுக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், சினிமா வாய்ப்பு கிடைத்ததால் அவர் விலகியிருக்கலாம் என்று கூறிப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress dharshna sripal quite vijay tv tamizhum saraswathiyim serial

Best of Express