வக்கீல் கனவு… காதல் முறிவு… மன உளைச்சலில் இருந்து மீண்டு வந்த பாக்கியலட்சுமி ஜெனி லைஃப் ஸ்டோரி

Baakiyalakshmi Serial Jeni Lifestyle : வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த அவருக்கு சின்னத்திரை தனது அன்புக்கரங்களுடன் வரவேற்பு கொடுத்துள்ளது.

Tamil Serial Actress Divya Ganesh Lifestory : வெள்ளித்திரைக்கு போட்டியாக தற்போது சின்னத்திரை பரபரப்பாக இயங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீரியல். கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் முடங்கியபோதும் சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது. இதில் சீரியல்கள் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளவர் திவ்யா கணேஷ். விஜய்டிவியின் ஹிட் சீரியலாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா குடும்பத்தின் மூத்த மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் திவ்யா தனது சிறப்பாக நடிப்பின் மூலம், பல ரசிகர்களை பெற்றுள்ளார். இவரின் சமூக வலைதளபக்கங்களில் நாள்தோறும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.

சன்டிவியின் கேளடி கண்மனி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா, அதன்பிறகு சுமங்கலி, மகராசி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தான் விஜய் டிவியின் பாக்யலட்சுமி வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதில் வாழ்வில் ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று கடுமையாக முயற்சிக்கும் மாமியார் பாக்யலட்சுமிக்கு உறுதுணையாக .இருக்கும் ஜெனி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் தொடக்கத்தில் இவருக்குமு் செழியனுக்குமான காதல் காட்சிகள் கல்யாணம் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியல் பிரபலமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இநத காட்சிகள் என்று சொல்லாம். இந்த சீரியலை பார்த்த இல்லத்தரசிகள் பலரும் ஜெனி மாதிரி ஒரு மருமகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். அந்த அளவிற்கு இந்த கேரக்டரக்கு திவ்யா கணேஷ் உயிர்கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்து மதுரையில் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த அவருக்கு சின்னத்திரை தனது அன்புக்கரங்களுடன் வரவேற்பு கொடுத்துள்ளது. தற்போது சீரியில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும், திவ்யா, மலையாளம் மற்றும் தெலுங்கில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

ஆர்ஜேவாக ஆக வேண்டும் என்று ஆசையுடன் இருக்கும் திவ்யாவுக்கு தற்போதுவரை அந்த வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷூடன் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த திவ்யா தங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த திருமணம் தடைபட்டது.

அதன்பிறகு பெரிய மன உளைச்சலில் இருந்த திவ்யா தற்போது தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மீண்டும் சீரியலில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். பாக்யலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் தன்னை வெளியில் எங்கு பார்த்தாலும், அனைவரும் ஜெனி என்று அழைப்பதாகவே திவ்யா மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress divya ganesh life story update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com