பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி. டிதொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.

சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள திவ்யா கணேஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil