விஜய் டிவி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை திவ்யா கணேஷ். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார்.

அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார்.

தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார். சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா இன்ஸ்டாவில் கிளாமர் உடையில் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மஞ்சள் நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் சீரியலில் நன்றாக நடிக்கிறீர்கள். ஆனால் கிழிந்த பேண்ட் போட்ருக்கீங்க சம்பளம் பேமெண்ட் அதிகரிப்பு பண்ண சொல்லுங்க என கூறியுள்ளார். மற்றொருவர் கிழிங்க பேண்ட் லாம் போட்ருக்கீங்க… வீட்ல எலி தொல்லையா என கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“