என் கேரக்டருக்கு வேற நடிகையை தேடுங்கள்: விஜய் டிவி சீரியலில் இருந்து திவ்யா கணேஷ் விலகல்!

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் மகாநதி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் மகாநதி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Divya Ganesh

நடிகை திவ்யா கணேஷ்

விஜய் டிவியின் பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ். தமிழக்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisment

பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார். சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

அதேபோல் விஜய் டிவியின் மற்றொரு சீரியலான மகாநதி சீரியலிலும் திவ்யா கணேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். 4 சகோதரிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வரும் நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடிகை பிரதீபா என்பவர் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக திவ்யா கணேஷ் அந்த கேரக்டரில் நடிக்க வந்தர். இந்த சீரியலில் குமரன் – கங்கா இடையிலான காட்சிகளின் சமீபத்திய எபிசோடுகள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் இருந்து விலகுவதாக திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

Divya Ganes

மருத்துவமனையில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னால் மகாநதி ஷூட்டிங்கில் பங்கேற்க முடியவில்லை. அதனால் என் கேரக்டருக்கு வேறொரு நடிகைகளை அவர்கள் தேட வேண்டும். அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Divya Ganesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: