விமானத்தில் சந்தித்த மோசமான அனுபவம் : உடனடியாக பதிலடி கொடுத்த சீரியல் நடிகை

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருபவர் திவ்யா கணேஷ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Divya Ganesh

நடிகை திவ்யா கணேஷ்

விமானத்தில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நபருக்கு சரியான பதிலடி கொடுத்தாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் கூறியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கணவன் மனைவி இடையேயான புரிதல், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல முக்கிய தேவைகளை வலியுறுத்தும் இந்த சீரியிலல் பாக்யாவின் மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்த வருவபர் திவ்யா கணேஷ். செல்லம்மா, கேளடி கண்மணி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் திவ்யா கணேஷ் விமானத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திவ்யா கணேஷிடம் கோபத்தில் யாரையாவது அடித்த அனுபவம் உண்டா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த திவ்யா கணேஷ் ஒரு முறை விமானத்தில் இப்படி நடந்து. அதற்காக எல்லா விமானங்களிலும் இப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. அதேபோல் விமானத்தில் இது போன்று நடந்தது எனக்கு மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு விமானத்தில் வந்துகொண்டிருந்தேன்.

Advertisment
Advertisements

அப்போது எனக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் என்னிட்டம் தவறாக நடக்க முயற்சித்தபோது அவரை நான் அறைந்துவிட்டேன். நடுவானில் இந்த சம்பவம் நடந்தது. யாருக்காக இருந்தாலும் நான் இப்படித்தான் செய்திருப்பேன். ஆனால் இது எனக்கு நடந்தது. எனது சொந்த அனுபவம். இவ்வாறு தவறாக நடந்துகொள்பவர்களை சும்மா விடக்கூடாது என்று கூறியுள்ளார்.  

மேலும் மீடியாவில் எதையுமே வெளிப்படையாக பேச முடியவில்லை. நான் ஒன்று சொன்னால் அதை வேறுவிதமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் தான் பேட்டியில் கூட என்னால் எதையும் வெளிப்படையாக கூற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Divya Ganesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: