விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை திவ்யா கிருஷ்ணன் மகா சிவராத்திரியை முன்னிட்டு அகோரி வேடத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான பல நடிகைகள் தற்போது முன்னணி சீரியல் நடிகையாகவும், சினிமா நடிகையாகவும் வலம் வருகின்றனர். சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்றாலும் தற்போது சின்னத்திரை இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் சீரியல்களும் அதில் நடித்து வரும் நட்சத்திரங்களும் தான்.
அந்த வகையில் விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா கிருஷ்ணன். வேலைக்காரன் உள்ளிட்ட பல விஜய் டிவி சீரியல்களில் நடித்த இவர், தற்போது சன் டிவியின் அருவி சீரியலில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா கிருஷ்ணன் அவ்வப்போது வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.
அதேபோல் தினம் ஒரு திருக்குறள் என்று இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் கூட திவ்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார். இதனால் இவர் வெளியிடும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இதனிடையே நேற்று மகா சிவராத்திரியை முன்னி்ட்டு திவ்யா கிருஷ்ணன் அகோரி வேடத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“