பிரபல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தான் கர்ப்பமாக இருக்கும்போது தனது கணவர் அர்னவ் தனது வயிற்றில் எட்டி உதைத்து கொடுமைபடுத்தியதாக புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக திவ்யா ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
சின்னத்திரையில் செவ்வந்தி சீரியல் மூலம் அறிமுகமான நடிகை திவ்யா ஸ்ரீதர், அதன் பிறகு பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்பே திருமணமாகி முதல் கணவருடன் ஒரு மகள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே திவ்யா ஸ்ரீதர் ‘கேளடி கண்மணி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த அர்னவ் மீது திவ்யாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், இதன் விளைவாக திவ்யா கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு குடும்பத்தினரும் கலந்து கொண்ட எளிய விழாவில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திவ்யா ஸ்ரீதர் அர்னவ் மீது போலீசில் புகார் செய்தார். அதில், தான் கர்ப்பமாக இருந்தபோது கணவர் அடிப்பதாகவும், வயிற்றில் எட்டி உதைத்ததாகவும், கிட்டத்தட்ட கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே அர்னவை பிரிந்த திவ்யா ஸ்ரீதர், தனக்கு பிறந்த குழந்தையின் கையை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காத்திருப்பு நீண்டது ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, வலிமை கண்டிப்பாக நிபந்தனையற்றது. நான் என்னில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றி, நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று அவர் ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”