சன் டி.வி.யின் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நந்தினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியா மருத்துவமனையில் இருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் பிரபலமாக இருந்து வருகின்றனர். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த கேரக்டர் ஆதிமுத்து குணசேகரன். இந்த கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் மாரிமுத்து.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என்று இருந்தாலும் மாரிமுத்துவுக்’கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்த கேரக்டர் ஆதி குணசேகரன். இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கேயே மரணமடைந்தார். அவரின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஹரிப்பிரியா (நந்தினி) உடல்நிலை சரியில்லை என்று வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், என்ன ஆச்சு எதிர்நீச்சல் சீரியலுக்கு? அடுத்தடுத்து நடிகர்களுக்கு இப்படி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது என்று ஃபீல் பண்ணி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“