விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் முதலில் சீசனில் கொடூர வில்லி வெண்பாவாக நடித்த ஃபரீனா ஆசாத் என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை ஒரு காரணமாக இருந்தாலும், வெற்றி பெற்ற சினிமா டைட்டிலும் ஒரு காரணம். அந்த வகையில் பாரதி கண்ணம்மா என்ற டைட்டிலுடன் வெளியான சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அருண் பிரசாத், வினுஷா தேவி, ஃபரீனா ஆசாத் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியலில், தனது நிறத்தால் அவமதிக்கப்படும் ஒரு பெண் அழகே முக்கியம் என்று நினைக்கும் ஒரு தொழிலதிபரின் மருமகளாக செல்லும்போது நடக்கும் சம்பவங்களும், தனது கணவரை ஒருதலையாக காதலிக்கும் ஒரு பெண்ணின் சூழ்ச்சியும் தான் முக்கிய கதைக்களம்.
இந்த சீரியலில் பாரதியை ஒருதலையாக காதலிக்கும் வில்லி வெண்பாவாக வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ஃபரீனா ஆசாத். இவர் செய்யும் வில்லத்தனம் சீரியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் முதல் சீசனில் இவர் மனநல மருத்துவமனையில் நடிப்பது போல் காட்டி இருந்தாலும் அதன்பிறகு இவரின் கேரக்டர் சீரியலில் வராமல் முடித்துக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கப்பட்டு தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாரதியாக சன்டிவியின் ரொஜா சீரியலில் நடித்த சுப்பு சூரியன் நடித்து வரும் நிலையில், கண்ணம்மாவாக வினுஷா தேவி தொடர்ந்து வருகிறார். இதனிடையே சீரியலில் மேலும் பரபரப்பை அதிகரிக்க தற்போது வெண்பா என்டரி கொடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிச்சன் கலாட்டா, அஞ்சரை பெட்டி மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள ஃபரீனா ஆசாத், பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகத்திலும் அவர் என்டரி கொடுக்க உள்ளது சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil